திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இலங்கைத் தமிழர்களின் வரலாறு: வரலாற்று நூல்கள்.


இலங்கைத் தமிழர்களின் வரலாறு: வரலாற்று நூல்கள்.

தமிழர்களின் வரலாறு பற்றி குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் வரலாறு பற்றிய வரலாற்று நூல்கள்  மிகப் பிந்திய காலத்தில்தான் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

கி.பி. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கருதப்படும் வையாபாடல் தான் இலங்கைத் தமிழர்களின் முதல் வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலை எழுதியவர் வையாபுரி ஐயர் என்பவராவார். இதே காலப்பகுதியில் (1591) எழுந்த வரலாற்று நூலாக கருதப்படுவது கைலாய மாலை எனும் நூலாகும். இந்நூலை எழுதியவர் முத்துராசக் கவிராசர் என்பவராவார்.  

இதனையடுத்து 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  வரலாற்று நூலாக அமைவது யாழ்ப்பாண வைபவமாலை (1736) எனும் நூலாகும். இந்நூலை எழுதியவர் மயில்வாகப் புலவர் என்பவராவார்.

இருபதாம் நூற்றாண்டில் ஆ. முத்துதம்பிப்பிள்ளை என்பவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (1915) செ. இராசநாயகம் என்பவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (1933) ஆகிய நூல்கள் தோற்றம் பெற்றன. இந்நூல்கள் யாழ்ப்பாணத்தின் வரலாற்றை விபரிக்கும் நூல்களாகும். 

இருபதாம் நூற்றாண்டில்தான் மட்டக்களப்பு பற்றிய வரலாற்று நூல்கள் தோற்றம் பெறுகின்றன. மட்டக்களப்பு வரலாற்று நூல்களின் முதலில் தோன்றியதாக கருதப்படுவது எவ்.எக்ஸ்.சீ. நடராசா எழுதிய மட்டக்களப்பு மாண்மியம் ஆகும். இந்நூல் 1962 இல் வெளியிடப்பட்டது. வி.சீ.கந்தையா எழுதிய மட்டக்களப்பு தமிழகம் 1964 இல் வெளிவந்தது. 

விஜய் - திருத்தம் 18.02.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக