திங்கள், 9 மார்ச், 2015

மட்டக்களப்பு பிரதேசம் - அறிமுகம்

மட்டக்களப்பு பிரதேசம் - அறிமுகம்
இலங்கையின் கிழக்கக் கரையோரத்தில்> கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மட்டக்களப்புப் பிரதேசத்தின் எல்லைகள் காலத்திற்குக் காலம் மாற்றமுற்று வந்துள்ளன.
பண்டைய மட்டக்களப்பானது வடக்கே வெருகலாற்றையும்> கிழக்கே வங்காள விரிகுடாவினையும்> மேற்கே ஊவா மலைத்தொடர் வெல்லஸ பிரிவினையும்> தெற்கே மாணிக்க கங்கையினையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பிரதேசமாக விளங்கியதுடன் மட்டக்களப்பு தமிழகம் எனவும் அழைக்கப்பட்டது.
கிழக்கே அமைந்துள்ள நீண்ட கடற்கரைப் பிரதேசங்கள் நெய்தல் நிலமாக கொள்ளப்படுகிறது. மேற்கில் அமைந்துள்ள பரந்த பிரதேசம் காடு> வயல்> சிறு குன்றுகள் கொண்டமைந்திருப்பதனால் அவை முல்லை> மருதம்> குறிஞ்சி நிலங்களாகக் கொள்ளப்படுகின்றன.
மட்டக்களப்பின் மத்தியில் நீணடமைந்துள்ள மட்டக்களப்பு வாவி> மட்டக்களப்பு பிரதேசத்தினை எழுவான்கரை> படுவான்கரை என இரு பிரதான பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. வாவியின் கிழக்கே அமைந்துள்ள பிரதேசம் எழுவான்கரை. மேற்கே அமைந்துள்ள பிரதேசம் படுவான்கரை. மட்டக்களப்பு பற்றிய எழுத்திலும் பேச்சிலும் இவ்வழக்கு பொதுவாகப் பயன்பாட்டிலுள்ளது.
பண்டைய மட்டக்களப்புத் தமிழகம் புவியியல் ரீதியில் ஏனைய பிரதேசங்களிலிருந்து தனிமைப்பட்ட பிரதேசமாக விளங்கியது. மேற்கே மலைத்தொடர்கள், மகாவலி கங்கை மற்றும் அதன் கிளையாறுகள்> வடக்கே வெருகல் ஆறு, தெற்கே குமுக்கன் ஆறு> கிழக்கே வங்காள விரிகுடா என்பன அமைந்திருந்தமையால் இத் தனிமைப்பட்ட புவியியல் பண்பு ஏற்பட்டது. இதனால் வரலாறு> மொழி> பண்பாடு> சமூகக் கட்டமைப்பு என்பவற்றில் தனித்துமான தன்மைகள் ஏற்பட்டன. முக்கியமாக தனித்துவமான பண்பாட்டமசங்களை இன்றும் காணமுடிகிறது.
மிக அண்மைக்காலம் வரை மட்டக்களப்பிற்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கமான தரை வழித்தொடர்பும் விரித்தியடைந்திருக்கவில்லை. 1872இல் வரையப்பட்ட இலங்கைத் தேசப்படத்தில் மட்டக்களப்பிலிருந்து கண்டிக்குச் செல்வதற்கான தரைவழிப்பாதை ஒன்று மட்டுமே காட்டப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வாவியினால் பிரிக்கப்பட்டிருந்த பிரதேசங்களுக்கான தரை வழித்தொடர்பும் ஐரோப்பியராட்சியின் பின்னர் பாலங்கள் மற்றும் வீதிகள் அமைக்கப்பட்ட பின்னரே வளர்ச்சியடைந்தது.
கி.பி.1832 இல் கோல்புறூக் ஆணைக்குழு இலங்கையின் மாகாண எல்லைகள் குறித்து வெளியிட்ட  படத்தில்> கிழக்க மாகாணத்தின் மேற்கு எல்லையாக மகாவலி கங்கையின் கிழக்குப் பக்க கிளை ஆறு குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் மீளவரையப்பட்ட படத்தில் விந்தனைப் பகுதி ஊவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பட்டிப்பளை (கல்லோயா) ஆற்றுச் சமவெளியின் ஒரு பகுதியும் மாத்தளை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில்(1948) மட்டக்களப்பு 6998 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் 202>987 சனத்தொகையையும் கொண்டதொரு பிரதேசமாக விளங்கியது. 1963 ஆம் ஆண்டின் இலங்கை சனத்தொகை கணிப்பீட்டில் தெற்கே குமுக்கன் ஆறு மட்டக்களப்பின் எல்லையாக குறிக்கப்பட்டிருந்ததுடன், 951.6 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டதொரு பிரதேசமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்ப தமிழகத்தின் தெற்கில்> 1952 இல் கல்லோயாக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டதுடன் பெருமளவு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டதுடன், அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதனால் தற்போது, தெற்கே அம்பாறை மாவட்டம் எல்லையாக உள்ளது. மேற்கே பொலன்னறுவை மாவட்டம் எல்லையாக உள்ளன.
தற்போது, மட்டக்களப்பு மாவட்டம் தெற்கிலும் தென்மேற்கிலும் அம்பாறை மாவட்டத்தையும், மேற்கிலும் வடமேற்கிலும் பொலன்னறுவை மாவட்டத்தையம் எல்லைகளாகக் கொண்டும் 2633.2 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் 393>413 மக்களையும்(2004) கொண்டதொரு பிரதேசமாகவும் குறிப்பிடப்படுகிறது. அண்மைய சனத்தொகைக் கணிப்பீட்டின் (2012) படி மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை 525>142 ஆகும். இதில் தமிழர்கள் 381>285 ஆகும். இது மொத்த மவாட்ட சனத்தெகையில் 72.6 சதவீதமாகும். முஸ்லிம்கள் 133>844 ஆகும். இது 25.5 சதவீதமாகும். சிங்களவர் 6>127 பேர் வாழ்கின்றனர். இவர்களின் சதவீதம் 1.2 ஆகும்.

மட்டக்களப்பு கடல் மட்டத்திலிருந்து 7.62 மீற்றருக்கு மேற்படாத உயரத்தினைக் கொண்ட சமதரைப் பிரதேசமாகவும் விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக